திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்கோளாறு காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமானார். இருப்பினும் அவர் தீவிர அசியலில் ஈடுபடாமல் முக்கிய தலைவர்களை மட்டும் சந்தித்து வருகிறார்

இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply