திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும். ஈ.வி.கே.எஸ் கூறியது எதற்காக தெரியுமா?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும். ஈ.வி.கே.எஸ் கூறியது எதற்காக தெரியுமா?

evksகடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தொகுதிகளில் திமுக போட்டியிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி உள்பட திமுகவின் முன்னணி தலைவர்கள் கருத்து தெரிவித்ததாகவும், கூட்டணி கட்சிகளால்தான் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் திமுக வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றது. இதனால் அடுத்து வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு திமுகவை விட்டால் கூட்டணிக்கு மாற்று வழியில்லை. அதிமுக, பாஜகவிடம் நெருங்கி வருவதால் அந்த பக்கம் போக வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி உடையும் தருவாயில் இருப்பதால் அங்கும் காங்கிரஸ் செல்ல முடியாது. தனித்து போட்டியிட்டால் டெபாசிட் பறிபோகும் நிலையில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது. எனவே வேறு வழியில்லாமல் திமுகவில் முதுகில் காங்கிரஸ் கட்சி பயணித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply