பாமகவை காப்பியடிப்பதே திமுகவுக்கு பொழைப்பா போச்சு! அன்புமணி

பாமகவை காப்பியடிப்பதே திமுகவுக்கு பொழைப்பா போச்சு! அன்புமணி

கடந்த சில வருடங்களாகவே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கும் இடையே சொற்போர் நடந்து வருகிறது. குறிப்பாக ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் இருவருக்கும் போட்டி அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் பூரண மதுவிலக்கு, ஏரி குளங்கள் தூர் வாறுதல் உள்பட பல பாமகவின் கொள்கைகளை, தி.மு.க. அப்படியே காப்பியடித்து வருவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி மேலும் கூறியதாவது: அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் போட்டி என்று கிளப்பிவிட்டார்கள். இப்போது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே போட்டி என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு அ.தி.மு.க-வும் போட்டி போட்டு தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் போட்டி வரும். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் போட்டி வரும். அதை எங்களால் கொண்டு வர முடியும். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வசனம் பேசுவதே வேலையாக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும் போதுதான், தமிழ்நாட்டுக்கு விடுதலை. அந்த நாள் வெகுவிரைவில் வரும்” என்று பேசினார்

Leave a Reply