இறுகிய முகத்துடன் கருணாநிதி-ஸ்டாலின். மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது?

இறுகிய முகத்துடன் கருணாநிதி-ஸ்டாலின். மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது?
dmkகடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுகவில் கருணாநிதி-ஸ்டாலின் இடையே அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்பட்டு வருவதாகவே கூறப்பட்ட நிலையில் இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இந்த கூட்டம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாகவும், கூட்டம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை கருணாநிதியும் ஸ்டாலினும் பேசிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக புள்ளி ஒருவர் கூறியபோது, இன்று காலை மாவட்ட செயலாளர் கூட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் வருவதற்கு முன் கருணாநிதியை ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அன்பழகன் ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்தித்தன. அப்போது கருணாநிதி ஸ்டாலினிடம் காட்டமாக பேசியதாகவும் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.
ஆனால் அதன் பின்னர் சமாதனம் அடந்த கருணாநிதி 10 மணிக்கு வரவேண்டிய கூட்டத்திற்கு 12. 05 க்கு கருணாநிதி வந்ததாகவும், மேடையிலும் வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் குறைந்த முகத்துடனே கருணாநிதி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கூட்டம் முடிந்தவுடன் அவர் யாரிடமும் பேசாமல் அண்ணா அறிவாலயத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply