ஜெயக்கொடி நியமனம், நீக்கம் இரண்டுக்கும் வழக்கு போட்ட திமுக

ஜெயக்கொடி நியமனம், நீக்கம் இரண்டுக்கும் வழக்கு போட்ட திமுக

குட்கா முறைகேடு விவகாரம் குறித்து ஜெயக்கொடி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென ஜெயக்கொடி மாற்றப்பட்டு, புதிய ஆணையராக மோகன் பியாரே நியமனம் செய்யப்பட்டதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து ஜெயக்கொடி மாற்றப்பட்டதற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதே திமுக தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குட்கா முறைகேடு விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஜெயக்கொடி நியமனம் செய்யப்பட்டபோதும், அவரது நியமனத்தை எதிர்த்து வழக்கு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அதிகாரி நியமனம் செய்யும்போது, அதே அதிகாரி மாற்றப்பட்டபோதும் எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கு செய்துள்ளதை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Leave a Reply