8 வழி பசுமை சாலைக்கு துப்பாக்கி முனையில் நிலம் பறிப்பா? திமுக திடுக் புகார்

8 வழி பசுமை சாலைக்கு துப்பாக்கி முனையில் நிலம் பறிப்பா? திமுக திடுக் புகார்

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கான நிலங்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி பறிக்கப்படுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

ரூ.10,000 கோடி மதிப்பில், சென்னை – சேலம் இடையே 277.3 கிலோமீட்டர் தூரத்தில் 8 வழி பசுமைவழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் சேலம் அருகே அரியானூர் வரை இந்த 8 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ, திருவண்ணாமலையில் 123.9 கிமீ, கிருஷ்ணகிரியில் 2 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, மற்றும் சேலத்தில் 36.3 கிமீ வழியாக செல்கிறது.

இந்த சாலை அமைக்க 30 மீட்டர் அகலத்திற்கு, மொத்தம் சுமார் 2,200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும். இந்த திட்டத்திற்கு விவசாயிகள் உள்பட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலம் கையகப்படுத்துதலில் மேட்டூர் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய திமுகவின் மாநிலத் தேர்தல் பணிக் குழு செயலாளருமான பார்த்திபனின் 2 ஏக்கர் குவாரியும் பறிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய அவர், விவசாயிகளை ஆலோசிக்காமல் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி துப்பாக்கி முனையில் இந்தியாவிற்குள் நுழைந்தது போல், தற்போதைய அரசும் துப்பாக்கி முனையில் நிலங்களை பறிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.

Leave a Reply