திமுக பொதுக்குழு கூட்டம் கூடும் தேதி அறிவிப்பு
திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொதுக்குழு தேதி திடீரென மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து பூரண குணமான கருணாநிதியின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. அன்றைய தினம் முக்கிய தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்ய டிசம்பர் 29ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்பட உள்ள நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் திமுக பொதுக்குழுவும் கூடுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.