சசிகலா தலைமையேற்றால் திமுகவுக்கு லாபமா?
மறைந்த தமிழக முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளரான செல்வி ஜெயலலிதா இடத்தை பிடிக்க சசிகலா முயன்று வருவதால் அதிமுக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சின்னம்மா என்று கூறப்படும் சசிகலா தேர்வு செய்யப்பட்டால் அதிமுக அதிருப்தியாளர்கள் திமுகவுக்கு தாவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை உறுதிசெய்யும் வகையில் நாகை மாவட்டத்தில் இன்று ஏராளமான அதிமுகவின் திமுகவில் சேர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சசிகலா, அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றால் திமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.