234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்
வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இன்றி 234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமை அதிரடியாக முடிவு செய்துள்ளது. பிரசாந்த் கிஷோர் அறிவுரையின்படி திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 41 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த நிலையில் இந்த முறை அந்த தவறை மீண்டும் செய்யாமல் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட திமுக தலைவர் முடிவு செய்துள்ளார்
இதனால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுக கூட்டணியில் கிடையாது என்றும் கூறப்படுகிறது திமுகவின் இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது