நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின். லாலுவிடம் முக்கிய பேச்சுவார்த்தை

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின். லாலுவிடம் முக்கிய பேச்சுவார்த்தை

stalinசமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதீஷ்குமார்-லாலுபிரசாத் ஆகியோர்களின் மெகா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இன்று நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நேற்று மாலை பீகார் தலைநகர் பாட்னா சென்றிருந்த மு.க.ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அகில இந்திய தலைவர் சரத்யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர்களை தனித்தனியாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் இரு தலைவர்களை சந்தித்தது குறித்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் சட்டசபை தேர்தலில் லல்லு பிரசாத்யாதவும், நிதீஷ்குமாரும் மெகா கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்கு தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நான் இங்கு வந்துள்ளேன்.

முன்னதாக மரியாதை நிமித்தமாக லல்லு பிரசாத் யாதவ், சரத்யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினேன். அப்போது அவர்களுக்கு கலைஞர் சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

English Summary: DMK leader Stalin to attend Nitish Kumar swearing-in

Leave a Reply