டிசம்பர் 15-ஆம் தேதி கருணாநிதி தலைமையில், திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தலைமைக் கழகத் தணிக்கைக் குழு அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.