சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த திமுக எம்எல்ஏ!

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த திமுக எம்எல்ஏ!

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகளையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களில் ஒருவரான கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமான முறையில் தான் நடத்தப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனையடுத்து தொடர் கூச்சலில் ஈடுபட்ட திமுகவினர், திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் தனபாலின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

சபாநாயகர் முன் இருந்த மேஜையை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மைக்குகளை கழற்றி வீசி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பு இருந்த மேஜை தலைகீழாக கவிழ்க்கப்பட்டது.

மேலும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். இதனையடுத்து சபாநாயகரை காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.

Leave a Reply