தமிழக சட்டசபையில் இருந்து இன்று மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் எதிர்க்கட்சிகளை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும், இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று காலை சட்டசபை தொடங்கிய உடனே கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி பேரவைத்தலைவர் எச்சரிக்கை செய்தும் திமுகவினர் தங்கள் அமளியை மீண்டும் தொடர்ந்தபடி இருந்தனர்.
இதையடுத்து, சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவித்ததாக திமுக உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டிய சபாநாயகர் தனபால், அமளி செய்யும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் அவைக் காவலர்கள் கூண்டோடு வெளியேற்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் வைத்தியலிங்கத்தின் பேச்சை கண்டித்தும் தே.மு.தி.க., புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.