மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம். பெரும் பரபரப்பு

மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம். பெரும் பரபரப்பு

stalinmk
தமிழக சட்டசபையில் இருந்து அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டசபையில் இருந்து சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் அனைவரையும் 1 வாரம் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று வீட்டு வசதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து பேசினர். பின்னர், திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் பேசியபோது ‘நமக்கு நாமே என்று கூறியவர்கள் கோட்டையை பிடிக்காமல் போய்விட்டனர்’ என்று மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே பயணம்’ குறித்து பேசினார்.

இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. குணசேகரன் எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கூச்சலிட்டதோடு தொடர்ந்து அவர் பேசியதை சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூச்சலிட்டனர். ஆனால் இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், “உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை. நமக்கு நாமே பயணம் மேற்கொண்டவர்கள் கோட்டையை பிடிக்காமல் போய்விட்டனர் என்று பொதுவாக கூறியதால் சபைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை’ என்றார்.

இதனால் சபாநாயகருக்கும், குணசேகரன் எம்.எல்.ஏக்கும் எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரையும் சபையில் இருந்து அப்புறப்படுத்துமாறும் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதில் மு.க.ஸ்டாலினை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply