மு.க.ஸ்டாலின் அதிரடியால் தமிழக சட்டசபை கலைக்கப்படுமா?
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுத்துவந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அவர பதவியை ராஜினாமா செய்த பின்னர் தனது அதிரடியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சசிகலா பதவியேற்பதை முடிந்தவரை தடுப்பது என்றும், அவ்வாறு தடுக்க முடியாத பட்சத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் 89 பேர்களும் ராஜினாமா செய்வது என்ற முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்றில் ஒருபகுதிக்கு மேல் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால், ஆட்சி கலைக்கப்படும் அல்லது கவர்னர் ஆட்சி கொண்டு வரப்படும். இதுதான் ஸ்டாலினின் திட்டம் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் இந்த கடைசி அஸ்திரத்தை பயன்படுத்திவிட்டால் சசிகலா முதல்வர் பதவியை எந்த காலத்திலும் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். மேலும் ஒரு கொடுங்கோல் ஆட்சியை தடுத்தவர் ஸ்டாலின் என்ற இமேஜூம் அவருக்கு உயரும். இதுகுறித்த அறிவிப்பை ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.