சட்டசபையில் தொடர் அமளி: திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

சட்டசபையில் தொடர் அமளி: திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

தமிழக சட்டசபை பெரும் பரபரப்புக்கு இடையே இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது. அதனையடுத்து சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி ஜி.எஸ்.டி.மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால் அந்த சமயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதோடு, ‘எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு’ என்ற பதாகைகளுடன் கோஷமிட்டு சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் எச்சரிக்கையையும் மீறி தொடர் அமளியில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்தரவின்பேரில் திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply