தைரியம் இருந்தால் இளமதியை தனியாக அனுப்புங்க: திமுக எம்பி ஆவேசம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று காவல்நிலையத்தில் ஆஜரான அவர், தன் தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், காதல் திருமணம் செய்ய தனது மகளை கடத்தியதாக பவானி காவல் நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, செல்வன் உட்பட 4 பேர் மீது இளமதியின் பெற்றோர் சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது., சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் கோழைகளிடம் கேட்கிறேன். தைரியம் இருந்தால் இளமதியை தனியாக பிரஸ்மீட் அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது.,
சமூக நீதி மறுக்கபடுகிறது
தற்காலிக வெற்றி என நம்பும் #கோழைகளிடம் கேட்கிறேன்.#தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.😡
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 14, 2020