திமுக தலைவர் கருணாநிதி சென்னை மருத்துவமனையில் அனுமதி
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி இன்று அதிகாலை 5.45 மணி அளவில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒவ்வாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி காணப்பட்ட கருணாநிதி, முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி அவர்கள் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகனும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்பட திமுகவின் முன்னணி தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.