அதிமுக அணிகளின் இணைப்பில் குழப்பம். தேர்தலுக்கு தயாராகும் திமுக

அதிமுக அணிகளின் இணைப்பில் குழப்பம். தேர்தலுக்கு தயாராகும் திமுக

அதிமுக அணிகள் எப்படியும் இணைந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு நேற்று ஏமாற்றமே கிடைத்துள்ள நிலையில் அணிகள் இணைப்பு தாமதமாகும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்க தினகரன் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பதவியை கருத்தி கொண்டு கண்டிப்பாக அணிகள் இணைந்தாலும் இணையாவிட்டாலும் ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்க எம்.எல்.ஏக்கள் முன்வர மாட்டார்கள் என்பது தினகரனுக்கு தெரியும். இந்த நிலையில் இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பார்களே அந்த பணம் கைமாறினால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தான் திமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் திமுகவுக்கு ஆதரவு நிலையை எடுக்க தயாராக இருக்கும் நிலையில் பா.ம.க-வையும் திமுகவில் இணணக்க முயற்சிகள் நடைபெறுகிற்து. மேலும் மதிமுக, தமாக ஆகிய கட்சிகளும் திமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply