மு.க.ஸ்டாலினுக்கு 50 நாற்காலிகள். திமுக அதிரடி
தமிழக சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜூன் மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அறை மற்றும் இருக்கைகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டியது. அதுமட்டுமின்றி சட்டமன்றத்திற்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் தி.மு.க. தரப்பில் இருந்து சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதிய அறை ஒன்று ஒதுக்கப்பட்டு. அதில் சோபா மற்றும் பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. ஆனால் அந்த சேர்கள் நேற்று திடீரென அகற்றபட்டு அதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் அறையில் 50 புதிய நாற்காலிகள் திமுக சார்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை அலுவல அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, புதிய நாற்காலிகள் போடப்பட்ட விவகாரத்தில் எங்களிடம் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், தலைமைச் செயலகத்தில் வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.