பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது. கருணாநிதி கோரிக்கை

anna and karunanidhiதி.மு.க.வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆகியோர்களுக்கு தனித்தனியே கடிதம் எழுதிய தி.மு.க. தலைவர் கருணாநிதி,  அந்த கடிதத்தில் ”பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து, நம் நாட்டு தேசிய தலைவர்களின் பெயரை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாங்கள் அறிகிறோம். தி.மு.க.வின் நிறுவனரும், மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற்பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா இந்தியாவின் உயரிய விருதுக்கு பெரிதும் பொருத்தமானவர். அவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

எனவே, வரும் குடியரசு தினத்தன்று பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வாஜ்பாய் உள்பட ஐந்து பேர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply