16ஆம் தேதி முழு அடைப்புக்கு திமுக ஆதரவு. கருணாநிதி அறிவிப்பு
காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை கொடூரமாக தாக்கிவரும் கன்னடர்களின் போக்கை கண்டித்து வரும் 16ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே ம.தி.மு.க. நாம் தமிழர் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் அதிமுக இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து எந்தவித அறிவிப்பும் செய்யாததால் பேருந்துகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என கூறப்படுகிறது.