தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை

 நீதிமன்றம் செல்கிறது திமுக

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவு பொருள்களை தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் வழங்கக்கூடாது என்றும் இதனால் சமூக விலகல் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வழங்கலாம் என்றும் நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த தடைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது திமுக அதிரடியாக இதுகுறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முறையீடு செய்துள்ளது

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அவசர வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply