மூவேந்தர் முன்னணி கழகம் என்ற கட்சியின் நிறுவனர் சேதுராமனின் வீடு மற்றும் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் இன்று திடீரென அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது மதுரை வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உத்தங்குடியில் உள்ள மூவேந்தர் முன்னணி கழக நிறுவனரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சேர்மனுமான டாக்டர் சேதுராமனின் வீடு, மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை, தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைகளில் இன்று காலையில் இருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அவர் குடும்பத்தினருக்கும், அவருக்குமிடையே நடந்து வரும் சொத்து பிரச்னையின் விளைவாக இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.