பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டருக்கு விடுதலை கிடைக்குமா? அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்தல்

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டருக்கு விடுதலை கிடைக்குமா? அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்தல்
pakistan
அமெரிக்காவை மட்டுமின்றி உலகையே உலுக்கிய மிகப்பெரிய தாக்குதல் என்றால் கடந்த  2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் நடத்திய தாக்குதலைத்தான் கூற வேண்டும். ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றை தீவிரவாதிகள் விமானங்களை மோதவிட்டு, தாக்கினர். இந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமாக பின்லேடனை அமெரிக்க அரசு சல்லடை போட்டு தேடி வந்த நிலையில் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கி இருப்பதை அறிந்து பாகிஸ்தானின் அனுமதி இன்றியே அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றது. இந்நிலையில் பின்லேடன் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தவர், டாக்டர் அப்ரிடி என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் டாக்டர் அப்ரிடியை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தற்போது வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியபோது, ‘டாக்டர் அப்ரிடி நல்லவிதமாக நடத்தப்படுவார். அவர் நலமுடன் இருக்கிறார் என்று பாகிஸ்தான் உறுதிபட தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் நேர்மைக்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அவரை விடுதலை செய்வது குறித்து பாகிஸ்தான் எந்த உறுதியும் தரவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என கூறினார்.

Leave a Reply