மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதுரை அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர், நோயாளிகள் மருந்து வாங்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனை வளாகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின் மருத்துவரின் அறைக்கு சென்ற போது மருத்துவர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பணி நேரத்தில் தனது அறையில் இருந்தபடி பணி மேற்கொள்ளாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.