அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

images (29)

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றுவதற்கு அலோபதி மருத்துவப் பிரிவின் அனைத்து துறைகள் மற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை, பெங்களூரு மற்றும் புதுடில்லி ஆகிய நகரங்களில் பிப். 1 முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இரண்டாண்டு பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குள்பட்ட கன்சல்ட்ண்டுகள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 40 வயதிற்குள்பட்ட எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலை அளிப்போரால் வழங்ஙகப்படும்.

எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை ovemcldr000gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 22502267, 22505886, 08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக அல்லது www.omcmanpower.com என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply