மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் தொடர்போராட்டம் எதிரொலி. 1000 அறுவைசிகிச்சைகள் நிறுத்தம்
டாக்டர்களை நோயாளிகளின் உறவினர் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநிலம் முழுவதிலும் மருத்துவமனைகளில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சுமார் 4,000 மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதியுறுகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த போராட்டம் காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சுமார் 1000 அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரிக்கை விடுத்தும் மருத்துவர்கள் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக ஏற்று நடத்திய மும்பை உயர்நீதிமன்றம் ‘அத்தியாவசிய சிகிச்சைகளை மூத்த மருத்துவர்கள் மேற்கொண்டாலும், இந்த போராட்டத்தால் ஏராளமான நோயாளிகள் முறையான மருத்துவ சிகிச்சையை இழந்துள்ளனர். முன்கூட்டியே மருத்துவர்களின் போராட்டம் குறித்து விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றம், மருத்துவர்களின் போராட்டத்தால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என உத்தரவிட்டனர். மீறி போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனிடையே, மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உஉடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.