தங்கமங்கை பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம். கான்பூர் ஐஐடி வழங்குகிறது
இந்தியாவின் தங்கமங்கையும், தடகள வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் பி.டி.உஷாவுக்கு கான்பூர் ஐஐடி டாக்டர் பட்டம் வழங்குகிறது. இந்த டாக்டர் பட்டம் உஷா பெறும் இரண்டாவது டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தை சேர்ந்த பி.டி. உஷா, சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர், ‘இந்திய தடகளங்களின் அரசி. ‘இந்தியாவின் தங்க மங்கை’, என்று போற்றப்படும் நிலையில் தற்போது அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் தேடி வந்துள்ளது.
கான்பூர் ஐஐடி ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து வரும் நிலையில் இந்த ஆண்டு பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்துள்ளது. நாளை நடைபெறவுள்ள 50-வது பட்டமளிப்பு விழாவில் பி.டி. உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.