இந்திய எல்லையில் உள்ள வீரர்களுக்கு நூதன தொல்லை கொடுக்க சீனா திட்டமா?

இந்திய எல்லையில் உள்ள வீரர்களுக்கு நூதன தொல்லை கொடுக்க சீனா திட்டமா?

இந்தியா, பூடான், திபெத் நாடுகளின் சர்வதேச எல்லையில் முகாமிட்டுள்ள இந்திய படையை பின்வாங்க செய்ய நூதன முறையை சீனா கடைபிடிக்கவுள்ளதாக உளவுத்துறை மூலம் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்திய ராணுவத்தை இந்தியா, சீனா, திபெத் எல்லைப்பகுதியான டோக்லாம் என்ற பகுதியில் இருந்து பின்வாங்கச் செய்தால் மட்டுமே சீனாவின் சாலை அமைக்கும் பணி சுமுகமாக நடக்கும் என்பதால், இந்திய வீரர்களுக்கு விதவிதமான உளவியல் தொல்லைகள் கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.

எந்தவிதமான தொல்லைகள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும், எந்த தொல்லையையும் சமாளிக்க இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாகக் ஊறப்படுகிறது.

இதனிடையே சீனாவில் விரைவில் நடைபெறவிருகும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்துகொள்ள உள்ளார். அந்த சமயத்தில் அஜித் தோவால் இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் இந்த பிரச்னை குறித்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply