சென்னையில் டொனால்ட் தோசை. வாடிக்கையளர்கள் பெரும் ஆதரவு
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அபார வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு அமெரிக்காவில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருந்தாலும் உலக நாடுகள் அவரை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றன
இந்நிலையில் சென்னையை சேர்ந்த சுப்ரபா என்ற ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் டொனால்ட் தோசை என்ற ஒரு புதுவகை தோசையை அறிமுகம் செய்துள்ளார். இந்த தோசையில் வழக்கத்திற்கு அதிகமான நெய் விடப்பட்டு மொருமொருவென ஆரஞ்சு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்த தோசையை வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுவதாகவும், இந்த தோசைக்கு தினசரி ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.