தனிப்பட்ட விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டார் டொனால்ட் டிரம்ப்

தனிப்பட்ட விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டார் டொனால்ட் டிரம்ப்

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஒபாமாவை தனிப்ப்ட்ட முறையில் டொனால்ட் விமர்சனம் செய்து வந்தார். இதற்கு ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தற்போது அவர் தனது தனிப்பட்ட விமர்சனம் குறித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து டொனால்ட் கூறியதாவது: “சில நேரங்களில் அனல் பறக்கும் பிரசாரத்தின்போது, பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறபோது, நாம் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச முடியாமல் போய் விடுகிறது. அதாவது, தவறான வார்த்தைகளை பேசி விட நேரிடுகிறது. நான் அதைச் செய்திருக்கிறேன். நான் அதற்காக வருந்துகிறேன். குறிப்பாக தனிப்பட்ட முறையில் என் பேச்சால் வேதனை அடைந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பல ஊடகங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் இந்த தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்றே கூறுகின்றன

Leave a Reply