2020 அதிபர் தேர்தலிலும் டிரம்ப் போட்டி
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வரும் 2020ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இப்போதே பிராட் பர்சேல் என்பவரை பிரசார மேலாளராக நியமித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பின் வெற்றி மீது ஏற்கனவே ரஷ்யா உதவியதாக சந்தேகம் இருந்து வரும் நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்\
இதற்கு அச்சாரமாக 42 வயது இப்போதே பிராட் பர்சேல் என்பவரை பிரசார மேலாளராக டிரம் நியமனம் செய்துள்ளார். இவர் டிஜிட்டல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.பிராட் பர்சேல் இப்போதே டிஜிட்டல் மூலம் தனது பணியை தொடங்கி வரும் 2020-ம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்பை வெற்றி பெற செய்ய திட்டமிட்டு வருகிறார்.