அமெரிக்க தேர்தலால் ரூ.5400 கோடியை இழந்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க தேர்தலால் ரூ.5400 கோடியை இழந்த டொனால்ட் டிரம்ப்

donaldஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் மிகப்பெரிய கோடீஸ்வரரும், தொழிலதிபருமான டொனால்ட் கடந்த சில மாதங்களாக தேர்தல் பிரச்சார பணியில் இருந்ததால் அவருக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகவலை பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் விற்பனைக்காக 28 கட்டிடங்கள் கட்டினார். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் ‘பிசி’ ஆக இருப்பதால் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அவற்றில் மேன்ஹாட்டனில் உள்ள 18 கட்டிடங்கள் எதிர் பார்த்த அளவில் விலைக்கு விற்கவில்லை. அதே நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிக உயரமான 7 கட்டிடங்கள் அதிக விலைக்கு விற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் டிரம்ப்பின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பின் சரிவு இந்த அளவுக்கு குறைவாக இருந்ததில்லை.

Leave a Reply