முஸ்லீம் லண்டன் மேயர் அமெரிக்காவில் நுழைய தடையா? டொனால்ட் டிரம்ப் கூறுவது என்ன?

முஸ்லீம் லண்டன் மேயர் அமெரிக்காவில் நுழைய தடையா? டொனால்ட் டிரம்ப் கூறுவது என்ன?
donald
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும்  குடியரசு கட்சியின் வேட்பாளர் என்று கூறப்படும் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அதிபரானதும் அமெரிக்காவிற்குள் நுழைய முஸ்லீம்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் லண்டன் மேயராக பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தேர்வு பெற்றுள்ளார். இதனால் லண்டன் மேயர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுமா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

“லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னதாரணமாக இருப்பார் என நினைக்கிறேன்.

அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என நான் கூறியிருந்தாலும் லண்டன் மேயருக்கு மட்டும் விலக்கு அளிப்பேன். எல்லா விஷயங்களிலும் விதிவிலக்கு இருக்கும்தானே. அப்படித்தான் லண்டன் மேயருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிப்பதும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், “கன்சர்வேடிவ் கட்சியினர் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை விதைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றனர். எப்படி அமெரிக்காவில் டிரம்ப் முஸ்லிம்களை விமர்சிக்கிறாரோ அதே பாணியில் அரசியல் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் பிரச்சாரம் எடுபடவில்லை” என்று கூறியிருந்தார்.

Leave a Reply