அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர். செலவு யாருடையது?

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர். செலவு யாருடையது?

wallமெக்சிகோ நாட்டில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிபுகுவதால் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்றும் அதன் மொத்த செலவையும் மெக்சிகோ அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சாரத்தில் பேசினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மெக்சிகோ அதிபர் ‘தடுப்பு சுவர் கட்டும் செலவை மெக்சிகோ ஏற்காது என்றும் சமீபத்தில் தன்னை டொனால்ட் டிரம்ப் சந்தித்தபோது இதுபோன்ற கோரிக்கையை அவர் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் குறித்தும், அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த டொனால்ட் டிரம்ப், தற்போது மெக்சிகோ குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply