எனக்கு ஒரு டாலர் கூட சம்பளம் வேண்டாம். டொனால்ட் டிரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்கும் முன்னரே பல அதிரடி நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்.
மெக்சிகோ எல்லையில் சுவர், விசா கட்டுப்பாடு, அகதிகளை நாட்டில் இருந்து விரட்டுவது போன்ற செயல்களுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் பெறும் சம்பளம் தனக்கு தேவையில்லை என்றும் ஒரு டாலர் கூட நான் சம்பளம் வாங்க மாட்டேன் என்றும் சம்பளத்திற்காக தான் அதிபர் தேர்தலில் நிற்கவில்லை என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு $400,000 சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.