ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் பாராட்டு
2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அவர்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புதின் ‘திறமையான சிறப்பு வாய்ந்த மனிதர்’ என்று புகழ்ந்து கூறியதற்கு நன்றி கூறியுள்ள டொனால்ட், பதிலுக்கு புதின் ஒரு வலிமையான சக்தி வாய்ந்த தலைவர் என பதிலுக்கு புகழ்ந்துள்ளார். அமெரிக்காவும் ரஷ்யாவும் இருதுருவமாக இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டிருப்பதை உலக நாடுகள் ஆச்சரியமான பார்வையுடன் பார்த்து வருகிறது.
சமீபத்தில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி பெரும்சர்ச்சையில் சிக்கிய குடியரசு கட்சியின் தலைவர்களில் ஒருஅரான டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக்குரல் எழுந்த நிலையில். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மட்டும் டொனால்ட் டிரம்ப் திறமையான சிறப்புவாய்ந்த மனிதர் என்று பாராட்டினார்.
தன்னை பற்றி புதினின் கருத்துக்கு பதில் அளித்துள்ள டொனால்ட் டிரம்ப் விளாடிமிர் புதின் வலிமையான சக்தி வாய்ந்த தலைவர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் பிறநாடுகள் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது குறித்து கருத்து கூறிய டொனால்ட், ‘ரஷ்யா மட்டும் அல்ல அமெரிக்காவும் அது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகிறது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.