சன் டிவி சொத்துகளை பறிமுதல் செய்ய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

sim tvசன் டிவி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை பறிமுதல் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்க ஜூலை 23-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து டெல்லி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் தற்காலிகமாக தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் சன் டிவி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முடக்கி வைத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சன் டிவி நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டதை அடுத்து, சன் டிவி தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த  நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2ஜி வழக்கு தொடர்புடைய விவகாரம் என்பதால், தலைமை நீதிபதி அடங்கிய சிறப்பு அமர்வு தான் இதில் முடி வெடுக்க முடியும் என்று தெரிவித்து வழக்கை அந்த அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. சன் டிவி சொத்துகளை முடக்கும் இறுதி முடிவை எடுக்க நேற்று முன் தினம் வரை தடையிருந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள மற்றொரு நீதிபதி வராததால், வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சொத்துகளை பறிமுதல் செய்யும் எந்த முடிவையும் வரும் 23-ம் தேதி வரைஎடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்தனர்.

Leave a Reply