பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பதில் நிவாரண பணி செய்யுங்கள். ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பதில் நிவாரண பணி செய்யுங்கள். ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
Rajinikanth
சென்னை, கடலூர் உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தினால் கடும் அவதியில் இருக்கும் நிலையில் ‘இந்த வருடம் என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணியை செய்யுங்கள்’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு ஆகும்.ஆனால் இவ்வருடம் தமிழகம் முழுவதும் மழை, மற்றும் வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் வீடு மற்றும் பொருட்களை இழந்து துயரத்தில் இருப்பதால் தன்னுடைய ரசிகர்கள் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டு வெள்ள நிவாரண பணியினை செய்யுமாறு ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

English Summary: “Don’t celebrate my birthday” Rajinikanth asked his fans

Leave a Reply