குழந்தைகள் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள்….

Parents swear, and children sufferபொதுவாக சிறிய குடும்பங்களில் எளிதாக நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட குழந்தையின் மனதை வெகுவாக பாதித்துவிடும். அதாவது பெற்றோர் தங்களது குழந்தைகளின் முன் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வீட்டில், ஆண் – பெண் என்ற வேறுபாட்டை பற்றி பெரிதாகப் பேசக் கூடாது. அதாவது, நான் ஆண், அதனால் இதை செய்வேன், நீ இதை செய்யக் கூடாது என்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் எந்த ஒரு முக்கிய முடிவையும், கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும். நான் பெண் என்பதால் அவருக்கு அடங்கிப் போகிறேன் என்ற நிலையில் தாய் பேசக் கூடாது.

குழந்தைகள் முன்பு பெற்றோர் ஆடை மாற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கணவன் – மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தை குழந்தைகளின் முன்பு காட்டக் கூடாது. அதாவது முத்தமிடுதல், கட்டி அணைத்தல் போன்றவற்றை.

ஆபாசமான டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது, படிப்பது, பேசுவது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள தவறான உறவு முறை குறித்து குழந்தைகள் முன்பு விமர்சனம் செய்யக் கூடாது.

முக்கியமாகக் குழந்தைகள் முன்பு சண்டை போடக் கூடாது. கருத்துப் பரிமாற்றங்களை நல்ல முறையில் எடுத்துக் கூறும் போதும், சில வார்த்தைகள் குழந்தைகளை பாதிக்கலாம். எனவே, குழந்தைகள் முன்பு பெரிதாக விவாதங்களையும் தவிர்க்கலாம்.

Leave a Reply