பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டினால் வாஜ்பாய், அத்வானி நேர்ந்த நிலைதான் மோடிக்கும் ஏற்படும். சிவசேனா எச்சரிக்கை
பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டிய வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் அரசியலில் இருந்தே ஒதுங்கிய நிலை ஏற்பட்டது போல் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் மோடிக்கும் அதே நிலை ஏற்படும் என சிவசேனா எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா என்ற பத்திரிகையில் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில் பாகிஸ்தான், சாபமிடப்பட்ட மண் என்றும் லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் ரத்தம் உறைந்த பூமி என்றும் கூறியுள்ள சாம்னா, அங்கு சென்ற இந்திய தலைவர் யாரும், அரசியலில் நீண்டகாலம் நீடித்ததில்லை என தெரிவித்துள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியதாகவும், அதன்பின் அரசியலிலிருந்து வாஜ்பாய் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ள சாம்னா, அதேபோல்
பா.ஜ.க. மூத்த தலைவரான அத்வானி பாகிஸ்தான் சென்று அந்நாட்டின் முதுபெரும் தலைவரான முகம்மது அலி ஜின்னாவை புகழ்ந்த பின்னர் அவருடைய அரசியல் வாழ்க்கை சரிவைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
Chennai Today News: Don’t get closer to Pakistan. Sivasena warns to Modi