இந்த மாதம் வீட்டு வாடகை யாரும் வாங்க வேண்டாம்: மத்திய அரசு வலியுறுத்தல்

இந்த மாதம் வீட்டு வாடகை யாரும் வாங்க வேண்டாம்: மத்திய அரசு வலியுறுத்தல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு மட்டுமே வழி என்பதால் மத்திய அரசு ஊரடங்கு முடிவை 21 நாட்களுக்கு எடுத்துள்ளது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்க்கத்தினர் வருமானம் இன்றி இருப்பதால் இந்த மாதம் வீட்டு வாடகை எப்படி செலுத்துவது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காலத்தின் போது வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம் என்றும் வீட்டை காலி செய்யவும் வற்புறுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

இருப்பினும் வீட்டு ஓனர்கள் இதனை பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் வீட்டு வாடகையை வாங்கி மட்டுமே செலவு செய்து வரும் வீட்டு உரிமையாளர்கள் நிலை என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Leave a Reply