சொன்னதை செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ரஜினி

சொன்னதை செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் அரசியலுக்கு வந்தால் என்னை சுற்றி பணம் சம்பாதிக்கும் கூட்டம் இருந்தால் அவர்களை முதலில் வெளியேற்றுவேன்’ என்று கூறியிருந்தார். இது தற்போது உண்மையாகியுள்ளது. ரஜினிகாந்த் ரசிகர் மன்ற வரலாற்றில் முதல்முறையாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரஜினி சார்பில் சுதாகர் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவது யாதெனில் நமது மன்றகட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சைதை G.ரவியை மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், தகுதியிலிருந்தும் நீக்குகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இனி வரும் காலங்களில் அவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, மற்றவர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதையும் மீறி யாராவது அவருடன் தொடர்பு கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொண்டு, மற்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் மன்ற தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை தொலைக்காட்சி பேட்டி மற்றும் பொது விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்த்து, ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply