அரசியல் சண்டைக்கு ஏன் நீதிமன்றத்தை பயன்படுத்துகிறீர்கள்? மதுரை ஐகோர்ட் கண்டனம்
பொதுநல வழக்கு என்ற பெயரில் அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்று மதுரை ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது
நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், எனவே அதை உடனே அகற்ற வேண்டும் என்று நாகர்கோவில் நகர தி.மு.க. செயலாளார் மகேஷ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அந்த மணல் சிற்பம் அருகே அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் இருப்பதாகவும், அதில் உள்ள அண்ணா சிலையை மகேஷ்தான் பராமரித்து வருவதாகவும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் எதிர்வாதம் செய்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்றால் சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்க வேண்டும். எனவே உங்கள் அரசியல் சண்டைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தார்.