ஜெராக்ஸ் தேவையில்லை. ஒரிஜினலை காட்டினால் போதும். ரிசர்வ் வங்கி புது உத்தரவு
கடந்த 8ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் அவ்வாறு மாற்ற செல்பவர்கள் ஏதாவது அடையாள அட்டையின் ஜெராக்ஸ் காப்பியை கொண்டு செல்ல வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தற்போது அடையாள அட்டையின் ஒரிஜினலை வங்கி அதிகாரிகளிடம் காட்டினால் போதும் என்றும் அதற்கான ஜெராக்ஸ் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டியளித்த ஆர்பிஐ அதிகாரி ஒருவர், ”பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற செல்லும்போது, அடையாள அட்டை மட்டும் சமர்பித்தால் போதும். அதற்கான ஜெராக்ஸ் ஒப்படைக்கத் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் விவரங்களுடன் வங்கி வைத்திருக்கும் விவரங்கள் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒருசிலவங்கிகள் தாங்களாகவே ஜெராக்ஸ் எடுத்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் ஜெராக்ஸ் காப்பி ஒன்றுக்கு ரூ.3 வாங்கி பகல்கொள்ளை அடித்த ஜெராக்ஸ் கடைக்காரர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.