இனிமேல் ரிஸ்க் எடுக்காதீர்கள். அஜித்துக்கு விஜய் தாயார் அறிவுரை
விஜய், அஜித் ஆகிய இருவருமே கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை இருதுருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இவர்களை போல நெருங்கிய நண்பர்கள் யாருமில்லை என்பதை இருவரிடமும் நெருக்கமாக பழகிய பலர் கூறுவதுண்டு.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் தாயாரும் பிரபல பாடகியும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா, அஜித்துக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்தில், ‘அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அஜித், நீங்கள் திரைப்படங்களில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறீர்கள். சமீபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் இனிவரும் படங்களில் அதிக ரிஸ்க் எடுக்காமல் மிகுந்த கவனத்துடன் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்படி ஒரு தாயாக கேட்டு கொள்கிறேன். நீங்கள் படத்தில் நடிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பூரண நலமுடன் சந்தோஷமாக இருப்பது மிகவும் முக்கியம்’ என்று கூறியுள்ளார்.