தவறான முடிவுகளை தரும் ரேபிட் கிட்

சீனாக்காரன் வேலையை காமிச்சிட்டானா?

புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்களை கொண்டு 2 நாள்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்து கொண்டிருப்பதாகவும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் அதுவரை இந்த கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு வரவழைக்கப்பட்ட டெஸ்டிங் கிட்ஸ் தவறான பரிசோதனை முடிவுகள் காட்டுகிறது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சீனாக்காரன் வேலையை காமிச்சிட்டானா? என நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply