நேற்று முன் தினம் பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்த ஜெர்மன் விங்ஸ் என்ற நிறுவனத்தின் விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுக்குநூறாக சிதறிக்கிடக்கும் விமானத்தின் பாகங்களை பார்க்கும்போது அதில் பயணம் செய்த 144 பயணிகள் உள்பட அனைவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
16 ஜெர்மன் நாட்டின் குழந்தைகள் உள்பட மொத்தம் 144 பயணிகளும் ஆறு விமான நிறுவன ஊழியர்களுடனும் சென்ற ஏர்பஸ் A320 என்ற விமானம் நேற்று முன் தினம் பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி கிடைத்துள்ளதாகவும் மற்றொரு கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
26 ஹெலிகாப்டர்கள், மற்றும் 500 எமர்ஜென்ஸி குழுவினர்கள், மலையேறும் வீரகள் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உறவினர்கள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி விமான நிலையத்தில் கண்ணீருடன் தங்கள் உறவினர்கள் குறித்து நல்ல செய்தி வராதா” என்று இரண்டு நாட்களாக காத்திருக்கின்றனர்.