ராமாயணம் தொடரால் முதலிடத்தை பிடித்த தூர்தர்ஷன்: ஆச்சரிய தகவல்
தனியார் தொலைக்காட்சிகள் அதிகம் வந்த பிறகு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் யாரும் கண்டுகொள்வதே இல்லை என்றும் டிடி என்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சி என்றாலே யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை அடுத்து பொதுமக்களுக்கு பொழுதுபோகும் வகையில் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரப்பப்பட்டது
இந்த ராமாயணம் தொடரை ஒளிபரப்பக் கூடாது என கி வீரமணி உள்பட ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இந்த தொடருக்கு வரவேற்பு கிடைத்தது
இந்த நிலையில் தற்போது தொலைக்காட்சிகளில் ரேட்டிங்கில் முதல் முறையாக முதலிடத்தை தூர்தர்ஷன் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது வீரமணி போன்றவர்கள் தெரிவித்த எதிர்ப்பால் தான் தூர்தர்ஷனுக்கு இந்த அளவுக்கு பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
door